/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஹெல்ப் லைன்' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'ஹெல்ப் லைன்' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 08, 2025 11:57 PM

பாகூர், : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் அமைப்பின் சமுதாய பணியாளர் சதிஷ், நிர்வாக அதிகாரி நாகவள்ளி ஆகியோர் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், மன நலம், உடல் நலப் பிரச்னைகள் குறித்து விளக்கினர். முகாமில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பிரபாவதி, சத்யவதி, தம்பி ராஜலட்சுமி, பாக்கியலட்சுமி, கார்த்திகேயன், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.