/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவி எண் 181, திட்டம் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
/
உதவி எண் 181, திட்டம் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
உதவி எண் 181, திட்டம் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
உதவி எண் 181, திட்டம் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : டிச 14, 2024 03:35 AM

புதுச்சேரி: ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், உதவி எண் 181, திட்டம் குறித்து, ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கிளை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் இணைந்து, மகளிர் உதவி எண், 181 திட்டம் குறித்து, ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாரம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நேற்று நடந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் முத்துமீனா தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார்.
ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினார். உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ், திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். அவர உதவி எண் குறித்த, ஸ்டிக்கர் ஆட்டோவில், ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில், பஸ், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.