ADDED : மார் 17, 2024 05:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி மூலிகை தாவர வாரியம், விவசாயத் துறையின் தோட்டக்கலை பிரிவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்து, மூலிகை பயிரிடுதல் குறித்த பயிற்சி கருத்தரங்கை நடத்தியது.
கூட்டுறவு வங்கி கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி ராஜலட்சுமி வரவேற்றார்.
இதில், மூலிகை தாவரங்களை பயிருடுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விளக்கப்பட்டது.
ஆயுஷ் இயக்குனரக இயக்குனர் ஸ்ரீதரன், விவசாயத்துறை இயக்குனர் வசந்தகுமார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஆனந்தகிருஷ்ணன், விவசாயத் துறை இணை இயக்குனர்கள் சிவராமன் மற்றும் ஜாகிர் உசேன் பேசினர். மருத்துவ அதிகாரி ஜெயந்தி நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் பிரதீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி தட்பவெப்ப சூழலில் விளையும் மூலிகைகளை பயிரிடுவது குறித்தும், அதை மருந்து தயாரிப்பதற்காக உற்பத்தியாளர்களிடம் கொடுப்பது குறித்தும் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.
விவசாய ஆராய்ச்சியாளர் மணிவேல் உள்ளிட்டோர் மூலிகைகள் குறித்து விளக்கினர்.
ஏராளமான விவசாயிகள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

