sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இன்று துவங்கும் மலர் கண்காட்சியில் மூலிகை தாவர வாரிய சிறப்பு அரங்கம்

/

இன்று துவங்கும் மலர் கண்காட்சியில் மூலிகை தாவர வாரிய சிறப்பு அரங்கம்

இன்று துவங்கும் மலர் கண்காட்சியில் மூலிகை தாவர வாரிய சிறப்பு அரங்கம்

இன்று துவங்கும் மலர் கண்காட்சியில் மூலிகை தாவர வாரிய சிறப்பு அரங்கம்


ADDED : பிப் 09, 2024 05:46 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இன்று துவங்கும் மலர் கண்காட்சியில், புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் சார்பில், சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரக இயக்குனர் ஸ்ரீதரன் செய்திக் குறிப்பு:

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வேளாண் விழா -2024 மற்றும் 34வது மலர், காய்கறி, கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று 9ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இந்த கண்காட்சியில், புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் சார்பில் அரங்கம் (ஸ்டால் எண் 33-) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பயிரிடக்கூடிய மூலிகைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்கள் வழங்கப்படும்.

குறுகிய காலத்தில், 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக் கூடிய அஸ்வகந்தா (அமுக்கிரா) மூலிகை சாகுபடி' குறித்த தகவல்களும் மற்றும் விளக்கக் கையேடுகளும் வழங்கப்படும்.

மேலும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலிகை தாவர வாரியத்தின் பயனுள்ள திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி மூலிகை தாவர வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெறுமாறு அழைக்கிறோம். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us