/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயர் ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உயர் ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2025 10:20 PM

புதுச்சேரி; புதுச்சேரி அரசு நலவழித்துறை, லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி வரவேற்றார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் ஹரி கிருஷ்ணா, செவிலிய அதிகாரி புளோரா, ஆலோசகர் பூஷணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி தலைமை தாங்கி, 2025ம் ஆண்டிற்கான உலக உயர் ரத்த அழுத்தம் தினத்தின் கருப்பொருளான 'உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழ்க' என்பதை வலியுறுத்தி பேசினார்.
மருத்துவ அதிகாரி யுவராஜ் உயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.