/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல் - போலீசார் நல்லுறவு மாநில அளவில் உயர்மட்ட கமிட்டி
/
வக்கீல் - போலீசார் நல்லுறவு மாநில அளவில் உயர்மட்ட கமிட்டி
வக்கீல் - போலீசார் நல்லுறவு மாநில அளவில் உயர்மட்ட கமிட்டி
வக்கீல் - போலீசார் நல்லுறவு மாநில அளவில் உயர்மட்ட கமிட்டி
ADDED : ஜன 17, 2025 05:59 AM
புதுச்சேரி: வக்கீல் - போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த மாநில அளவிலான உயர்மட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தின் பாதுகாவலர்களாக போலீசார் இருக்கின்றனர். நீதியை பெற்று தருமிடத்தில் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர். இருவரும் இணைந்து செயல்படும்போது விரைவாக நீதியை பெற்று தர முடியும்.
ஆனால் சில நேரங்களில் இரண்டு தரப்பினரும் இரு துருவங்கமாக உரசலில் முடியும்போது, அது கோர்ட் நடைமுறைகளையும் பெரிதும் பாதிக்கிறது.
எனவே, ஐகோர்ட் வக்கீல்கள் - போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க மாநில அளவிலான உயர்மட்ட கமிட்டியை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரி கோர்ட்டில் வக்கீல் - போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தற்போது சீனியர் நீதிபதியை சேர்மனாக கொண்டு மாநில அளவிலான உயர்மட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் நீதிபதிகள், தலைமை செயலர், சட்டத் துறை செயலர், வக்கீல் சங்க தலைவர், சீனியர் வக்கீல்கள், மகளிர் வக்கீல் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோர்ட் வளாகத்தில் எந்த சிறிய பிரச்னை எழுந்தாலும், இந்த உயர்மட்ட கமிட்டி கூடி தீர்வினை காணும்.