/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஆலோசனை
/
கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஆலோசனை
கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஆலோசனை
கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு ஆலோசனை
ADDED : பிப் 01, 2025 05:46 AM
புதுச்சேரி: 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர் மட்ட குழு ஆலோசனை நடத்தியது.
முதலியார்பேட்டை, அனிதா நகரை சேர்ந்தவர் கருணா, 50. பிரபல ரவுடியான இவர் மீது, 5 கொலை உட்பட 18 வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 1997ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 1998 முதல் காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் அவர் மனு செய்தார்.
இதேபோல 20 ஆண்டுக்கும் மேல் சிறையில் உள்ள முதலியார்பேட்டை, வெங்கடேசனும் மனு செய்தார். இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம்கோர்ட், இரண்டு கைதிகளையும் விடுதலை செய்ய சாதகம், பாதகம் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் தலைமை செயலர், டி.ஜி.பி., சிறை கண்காணிப்பாளர், புதுச்சேரி தலைமை நீதிபதி உறுப்பினர்களாக உள்ளனர். அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான உயர்மட்ட குழு தலைமை செயலகத்தில் கூடி கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அறிக்கையாக வரும் 7ம் தேதிக்குள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கு வரும் 17ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது 2 கைதிகள் விடுதலை குறித்து தெரியவரும்.