/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்வழி போக்குவரத்துகளை கண்டறிய... உயர்மட்ட கமிட்டி; விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாராகிறது
/
நீர்வழி போக்குவரத்துகளை கண்டறிய... உயர்மட்ட கமிட்டி; விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாராகிறது
நீர்வழி போக்குவரத்துகளை கண்டறிய... உயர்மட்ட கமிட்டி; விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாராகிறது
நீர்வழி போக்குவரத்துகளை கண்டறிய... உயர்மட்ட கமிட்டி; விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாராகிறது
ADDED : ஜூன் 24, 2024 05:31 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நீர்வழி போக்குவரத்தினைகண்டறிந்து மாஸ்டர் பிளான் தயாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா எண்ணற்ற ஆறுகளையும், கால்வாய்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கான வாய்ப்புகள் மிகுதியாய் உள்ளன.
இந்திய நீர்வழிகளில் 15,544 கி.மீ. நீளமுடைய வழிகள் போக்குவரத்திற்கு ஏற்றவையாக உள்ளன. ஆனால் இத்தொலைவில் 5700 கி.மீ போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உயர்மட்ட கமிட்டி
இதனையடுத்து, மத்திய அரசு தேசிய அளவில் கடல் சார் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்திவருகிறது. மாநிலங்களையும் நீர் வழி போக்குவரத்தினை கண்டறிந்து ஊக்குவிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் புதுச்சேரியில் புதுச்சேரியில் நீர்வழி போக்குவரத்தினை கண்டறிய உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. துறைமுறை செயலர் சேர்மனாக கொண்ட இக்கமிட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். துறைமுக இயக்குனர் உறுப்பினராகவும்,ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஸ்டர் பிளான்
நீர்வழி போக்குவரத்தினை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியானது, புதுச்சேரியில் கடல் சார், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வழித்தடங்களை கண்டறிந்து, மாஸ்டர் பிளான் தயாரிக்கும்.
குறிப்பாக நீர்வழி மேம்பாடு, உள்நாட்டு மற்றும் கரையோரப் பெர்த்கள் மற்றும் முனையங்கள், திறன் மேம்பாடு, நகர்ப்புற நீர்ப் போக்குவரத்து, நதி கப்பல் போக்குவரத்து, பயணிகள் கப்பல், ரோரோ மற்றும் ரோபாக்ஸ் படகுகள், கடல் விமான சேவைகள், மிதக்கும் ஜெட்டிகள், மீன்பிடித் துறைமுகங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு தயாரிக்கும். ஏற்கனவே கட லோர மாநிலங்களின் கடல்சார் மாஸ்டர் பிளான் தயார் செய்ய கோரப்பட்டு இருந்தது. இவையும் இந்த மாஸ்டர் பிளானில் உள்ளடக் கம் செய்யப்பட உள்ளது.
சுற்றுலா
ஆற்றுவழிப் போக்குவரத்து கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா வளர்ச்சியிலும் இத்துறை பெரும்பங்காற்றி வருகி றது.ஆலப்புழை, கோழிக்கோடு ஆகிய ஊர்களில் இயக்கப்படும் படகு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கின்றன.
இதுபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் நீர்வழி போக்குவரத்தில் சுற்றுலா திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.
கடல் சார் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சிக்கன மானது, குறைவான எரி பொருள் செலவுடையது, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தாதது.
எனவே, நீர்வழி போக்குவரத்து புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் வழி வகுக்கும்.

