தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியை டிஜிட்டல் மையமாக உருவாக்க உயர்மட்ட தொழில்துறை கலந்துரையாடல்

 புதுச்சேரியை டிஜிட்டல் மையமாக உருவாக்க உயர்மட்ட தொழில்துறை கலந்துரையாடல்

 புதுச்சேரியை டிஜிட்டல் மையமாக உருவாக்க உயர்மட்ட தொழில்துறை கலந்துரையாடல்


ADDED : ஜன 24, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் நாஸ்காம் அமைப்பு இணைந்து, 'புதுச்சேரியை வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை மையமாக உருவாக்குதல்' என்ற தலைப்பில், உயர்மட்ட தொழில் துறை கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனர் ஸ்ரீராம் சுப்ரமண்யா, டி.சி.எஸ் காக்னிசன்ட், டெக்சியன் சிஸ்டம்ஸ், ஸ்டிரைவ், ஐடியாசன் மற்றும் ஜூசி சிஸ்டம்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாஸ்காம் தரப்பில் அதன் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், தென்னிந்திய இயக்குநர் பாஸ்கர் வர்மா ஆகியோர் பங்கேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு, புதுச்சேரி ஒரு சிறந்த இடமாகத் திகழ்வதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அரசின் கொள்கை கட்டமைப்பு, எளிதான தொழில்முறை, திறமையான மனித வளம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறை ஆகியவை தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் சுட்டிக்காட்டப்பட்டது. மாணவர்களை தொழில் துறைக்குத் தயார்படுத்தும் வகையில், சிறப்புப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்த நாஸ்காம் மற்றும் தொழில் அதிபர்களின் ஒத்துழைப்பை அரசு கோரியது.

கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம், தொழில்து றை, தொழிலாளர் நலன், போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகளின் செயலர்கள், கலெக்டர், தகவல் தொழில்நுட்ப இயக்ககத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us