/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு
/
நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு
நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு
நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு
ADDED : ஜன 11, 2025 06:32 AM

கடலுார் மாவட்டத்தில், ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை, நீர்வளத்துறை உயர்நிலைக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
பெஞ்சல் புயலால் உருவான கனமழையால், தென்பெண்ணை ஆறு, வெள்ளாறுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியசாளர் ஜானகி தலைமையிலான உயர்நிலை குழுவின் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் பெரியகங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, கலெக்டர் அலுவலகம் எதிர்புறம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் பகண்டை கிராமத்தில் பெண்ணையாற்றில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
இன்று, (11ம் தேதி) விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுவில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-நமது நிருபர் -