/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு உயர்கல்வி பயிற்சி
/
மாணவர்களுக்கு உயர்கல்வி பயிற்சி
ADDED : அக் 06, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் சார்பில், மாணவர்களுக்கான உயர் கல்வி, ஒழுக்க மேலாண்மை மற்றும் மனித வளப் பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி மிஷன் வீதி புனித அன்னாள் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை தாங்கினார். பத்மநாதன் அய்யனார் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஒழுக்க மேலாண்மை மற்றும் மனித வளப் பயிற்சி அளித்தார். துணை தாசில்தார் செந்தில்குமார் முருகையன், உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். கலைமாமணி மாலதி செல்வம் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.