ADDED : டிச 05, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து உரிமை மீட்பு குழு சார்பில், புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,கணபதி, பா.ஜ., பிரமுகர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
வங்கதேச இந்துக்களை பாதுகாக்கக்கோரி இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.