/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அம்மன் கோவில் எதிரே தேவாலயம் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
அம்மன் கோவில் எதிரே தேவாலயம் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில் எதிரே தேவாலயம் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில் எதிரே தேவாலயம் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2025 06:45 AM

புதுச்சேரி: காலாப்பட்டு அம்மன் கோயில் எதிரே தேவாலயம் கட்ட அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலாப்பட்டு வள்ளலார் நகர் குடியிருப்பு பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரே தேவாலயம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,மத மோதல்களை உருவாக்கும் வகையில் அனுமதி அளித்திருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
காலாப்பட்டு யூகோ வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில பொருளாளர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார்.
மாநில துணைத் தலைவர் மணிவீரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், இந்து கோயில் எதிரே தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
உழவர்கரை நகர் தலைவர் குமார் நன்றி கூறினார்.