/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொன்முடியை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
பொன்முடியை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 12, 2025 07:38 AM

புதுச்சேரி; சர்ச்சைக்குறிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து முன்னணியினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசி உள்ளார். இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை கண்டித்து, இந்து முன்னணியினர் புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் செந்தில் முருகன், துணை தலைவர்கள் நாகராஜன், மணிவீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று அண்ணா சாலையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அணிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் அமைச்சர் பொன்முடியின் படத்தை எரித்து கோஷமிட்டனர்.