கிருஷ்ண ஜெயந்திக்கு பொது விடுமுறை இந்து முன்னணி முதல்வரிடம் கோரிக்கை
கிருஷ்ண ஜெயந்திக்கு பொது விடுமுறை இந்து முன்னணி முதல்வரிடம் கோரிக்கை
ADDED : ஆக 26, 2026 07:33 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:
கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளும், இப்பண்டிகைக்கு பொது விடுமுறை அளித்துள்ளன.
ஆனால், புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், வாரியங்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை அளிக்கப்படுகிறது. நமது பக்கத்து மாநிலமான தமிழகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வரும் 4ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்காதது பொதுமக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பல்வேறு பண்டிகைகளுக்கு விடுமுறை அளித்து வரும் புதுச்சேரி அரசு, கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
