ADDED : ஜன 23, 2025 05:17 AM

வில்லியனுார்: கூடப்பாக்கம் ஹாக்கி கிளப் சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூடப்பாக்கம் ஹாக்கி கிளப் சார்பில் வீரர்கள் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தது. 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்ற போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில் ஹாக்கி டிராகன்ஸ் அணி முதல் இடத்தையும், ஹாக்கி டூப்பன்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கோனேரிக்குப்பம் கோவில் அறங்காவல்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக லீ புதுச்சேரி ஹாக்கி சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினர்.
இத்தோடரில் சிறப்பாக விளையாடிய மூன்று வீரர்களுக்கு தலா ரூ.3,000 மதிப்பிலான ஹாக்கி மட்டைகள் வழங்கப்பட்டன. லீ புதுச்சேரி ஹாக்கி சங்க நிர்வாகிகள் பழனி, மூர்த்தி, முன்னாள் இந்திய அணி வீரர் செந்தில்குமார், ஆரோக்கியராஜ், சேகர், சரவணன், அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கூடப்பாக்கம் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் ராம், பச்சையப்பன், சதீஷ், ராணி, கருணாகரன், அரவிந்த், பிரவின் ஆகியோர் செய்தனர். கூடப்பாக்கம் ஹாக்கி கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினர்.

