/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை
ADDED : நவ 17, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பிராந்தியம், காரைக்கால் பகுதியில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லுாரிகளுக்கும் இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

