/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்கிரிகுடி கோவிலுக்கு புனித பாதயாத்திரை
/
சிங்கிரிகுடி கோவிலுக்கு புனித பாதயாத்திரை
ADDED : ஜன 01, 2025 05:08 AM
புதுச்சேரி : லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் சிங்கிரிகுடிகோவிலுக்கு புனித பாதயாத்திரை செல்கின்றனர்.
புதுச்சேரி, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாத ஞாயிற்றுக் கிழமை பஜனைக்குழுவுடன் சிங்கிரிகுடி கோவிலுக்கு புனித பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
அதன்படி, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் 28ம் ஆண்டு புனித பாதயாத்திரை விழா வரும் 5ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது.
திருக்கோவிலுார் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாஸனத்துடன் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக சிங்கிரிகுடி கோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை சென்றடைகின்றனர். அங்கு, சுவாமி சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது.