/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல் படை தேர்வு திருத்த பட்டியல் வெளியீடு பயிற்சி பெற்று பணியில் இருந்த 68 பேர் நீக்கம்

ADDED : ஆக 06, 2025 09:09 AM
புதுச்சேரி : ஊர்காவல் படை வீரர்கள் தேர்வில் திருத்த பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பயிற்சி பெற்று பணியில் இருந்த 68 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, காவல்துறையில் ஊர்க்காவல்படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என, மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல் தகுதி, எழுத்து தேர்வு நடந்தது. அதில், 407 ஆண்கள், 75 பெண்கள் என 482 ஊர்காவல்படையினர் கடந்த ஆண்டு ஜூலையில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடிந்து 6 மாதங்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த சிலர், தேர்வில் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திற்கு வெளியே 15 கேள்விகள் இருந்ததாக கூறி, தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். மறு தேர்வு நடத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 86 முதல் 100 வரையிலான கேள்வி எண்களுக்கு தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 15 மதிப்பெண்கள் வழங்கி, புதிய தகுதி பட்டியலை வெளியிட்டு, நியமனம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, திருத்தப்பட்ட பட்டியலை பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை தேர்வு கட்டுப்பாட்டாளர் பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, திருத்தப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஊர்காவல்படையில் பெண்கள் 80 பேரும், ஆண்கள் 420 பேரும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மதிப்பெண் கிடைத்ததால் தேர்வில் தோல்வியடைந்த 68 பேர் புதிதாக தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனால், ஏற்கனவே பயிற்சி பெற்று, பணிபுரிந்து வரும் 68 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.