/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை
/
ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை
ADDED : மார் 05, 2024 05:12 AM

திருக்கனுார்: புதுச்சேரி ஊர்காவல் படை எழுத்து தேர்வை தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையின்றி எதிர்கொள்ள வேண்டுமென இன்ஸ்பெக்டர் ராஜகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி, எல்லைப் பகுதியில் உள்ள செட்டிப்பட்டு, போலீஸ் அதிகம் பணியாற்றும் கிராமமாக மாறி வருகிறது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த ஊர்காவல் படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வில், செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்ற இளைஞர்கள், தேர்வை எவ்வாறு தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைமை காவலர் சுமன்ராஜ் வரவேற்றார்.
இதில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு, எழுத்து தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும்.
அரசு பள்ளிகளில் படித்து உள்ளோம் என்ற தாழ்வு மனப்பான்மை இன்றி தன்னம்பிக்கையுடன் படித்தால் நிச்சயம் தேர்ச்சி பெறலாம் என கூறினார்.

