/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல்படை வீரர்கள் உறுதிமொழியேற்பு
/
ஊர்க்காவல்படை வீரர்கள் உறுதிமொழியேற்பு
ADDED : நவ 05, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 79 பெண்கள் உள்பட 467 ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துள்ள அவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காவல்துறையின் கவாத்து மைதானததில் நேற்று நடந்தது.
காவலர் பயிற்சி பள்ளியின் எஸ்.பி., ரங்கநாதன் உறுதிமொழியை வாசிக்க பயிற்சி முடித்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, பங்கஜ்ஜான், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்

