ADDED : செப் 08, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
பிறந்தநாள் விழா கொண்டாடிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, அமைச்சர் ராஜவேலு முன்னிலையில், நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்., பிரமுகர் பத்மகுமார் ரெட்டியார், ஜெயக்குமார், மோகன்ராம், சிவக்கொழுந்து ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ராஜசுந்தரம், முத்து, ஜெயக்குமார், விசு ஆகியோர் உடனிருந்தனர்.
