வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் உரிமம் தேவை
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் உரிமம் தேவை
ADDED : செப் 16, 2026 08:03 PM
புதுச்சேரி: வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என, உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு செய்திக்குறிப்பு;
உழவர்கரை நகாட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமம் பெறும் வகையில், லாஸ்பேட்டை அசோக் நகர், சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, வெங்கட்டா நகர் பூங்காவில், நாளை மறுநாள் (19ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற முகாம் நடக்கிறது. உரிமம் பெற வருபவர்கள் தங்கள் புகைப்படம், ஆதார் கார்டு, நாய்களுக்கு செலுத்திய தடுப்பூசி ஆவணம், நாய் புகைப்படம் ஆகியவை எடுத்து வரவும்.
வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
