சிறந்த காவல் துறை அதிகாரிகளுக்கு கவர்னர் பதக்கம் வழங்கி கவுரவிப்பு
சிறந்த காவல் துறை அதிகாரிகளுக்கு கவர்னர் பதக்கம் வழங்கி கவுரவிப்பு
ADDED : ஜன 27, 2024 06:37 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த குடியரசு தின விழாவில் காவல் துறையில் சிறந்த சேவையாற்றிய காவலர்களுக்கு கவர்னர் தமிழிசை விருது வழங்கி பாராட்டினார்.
ஜனாதிபதி பதக்கம்
விழாவில் 2022ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான காவல் பதக்கம் எஸ்.பி., பாலச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இவர், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, இருவர் கொலை வழக்கில் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தார். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து.
இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு 2022ம் ஆண்டிற்கான ஜனாதிபதி காவல் பதக்கம் வழங்கப்பட்டது. அவரின் 36 ஆண்டு கால காவல் துறை பணியை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. அவர் எப்.ஆர்.ஆர்.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்தபோது போலி ஆவணங்களை கண்டு பிடித்து வெளிநாடு புலம் பெயர்தலை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளின் பாராட்டை பெற்றார்.
ஓய்வு பெற்ற சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் கோதண்டபாணிக்கு 2022ம் ஆண்டு ஜனாதிபதி காவல் பதக்கம் வழங்கப்பட்டது. 2004ம் ஆண்டு சுனாமி, 2019ம் ஆண்டு கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றினார்.
உள்துறை அமைச்சர் காவல் பதக்கம்
சிறந்த பணிக்காக வழங்கப்படும் மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம் நெடுங்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு வில்லியனுார் காவல் நிலையத்தில் பணி புரிந்தபோது திருட்டு வழக்கில் ரூ. 33.5 லட்சம் பொருட்டுகளை மீட்டு, குற்றவாளிகளை திறம்பட கைது செய்தார்.
கவர்னர் காவல் பதக்கம்
காவல் துறையில் சிறந்த பணிக்கான வழங்கப்பட்டு வரும் கவர்னரின் காவல் பதக்கம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ரச்சனா சிங்கிற்கு வழங்கப்பட்டது. 2017ல் நடுக்கடலில் சிக்கிய 18 பறவை ஆய்வாளர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றினார். 2018ல் முதன் முதலாக மகளிர் காவலர் விளையாட்டு நடத்த முக்கிய பங்கு வகித்தார்.
இதேபோல் காவல் துறையின் இசைக்குழு பிரிவு உதவி சப் இன்ஸ்பெக்டர் சாந்தப்பன், புதுச்சேரி நீதிமன்றம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சிறப்பு நிலை ஏட்டு மணிகண்டன் ஆகியோருக்கு கவர்னரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவரது காவல் துறை சேவை நினைவு கூறப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
