தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவுர விரிவுரையாளர்கள் மனித சங்கிலி

 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவுர விரிவுரையாளர்கள் மனித சங்கிலி

 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவுர விரிவுரையாளர்கள் மனித சங்கிலி


ADDED : ஜன 15, 2026 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறையில், 292 கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஆசிரியர்கள், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன், கடந்த மாதம், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சங்க பிரதிநிதிகளை அழைத்து, பொங்கலுக்குள், அனைத்து ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதிளித்ததன் பேரில், போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், பணி நிரந்தரம் ஆணை கிடைக்காததா ல், நேற்று காலை மறைமலை அடிகள் சாலை அண்ணா சிலையில் அருகில் இருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை வரை, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் தலைமையில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர் பாலகுமார், தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சிரில் நிக்கோலஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பொற்செழியன், விரிவுரையாளர் சங்க சங்க தலைவர் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ராமதாஸ், அரசு தொடக்கப்பள்ளி நலச்சங்க தலைவர் மோகன்தாஸ், பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us