/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு
தோட்டக்கலை பயிர் சாகுபடி மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு
தோட்டக்கலை பயிர் சாகுபடி மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 22, 2025 11:22 PM
புதுச்சேரி: தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான மானியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேளாண் இணை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி வேளாண்துறையின், தோட்டக்கலை பிரிவானது, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலமாக, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கில், 2025--26ம் ஆண்டிற்கான காளான் உற்பத்திக்கூடம், காளான் விதை உற்பத்திக்கூடம், பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் மற்றும் இரும்பு கம்பி வேலி அமைத்தல், பேட்டரி மூலம் இயங்கும் விசை தெளிப்பான், பேக் ஹவுஸ், குறைந்தபட்ச பதப்படுத்தும் அலகு, குளிரூட்டப்பட்ட வேன், சூரிய சக்தி மூலம் பயிர் உளர்த்தும் கருவி, மண்புழு உர தொட்டி அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல் , சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுடன் கூடிய சில்லரை வணிகம் கடை அமைத்தல், பழம் மற்றும் காய்கறி விற்பனை தள்ளுவண்டி மற்றும் தேனீ வளர்ப்பு ஆகிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான மூலதன செலவினத்தில் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலமாகவோ அல்லது வேளாண் துறை இணையதளம் (https://agri.py.gov.in) மூலமாகவோ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.