/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனை மேலாண்மை செயல்திட்டம்: ஜிப்மரில் இன்று முதல் அறிமுகமாகிறது
/
மருத்துவமனை மேலாண்மை செயல்திட்டம்: ஜிப்மரில் இன்று முதல் அறிமுகமாகிறது
மருத்துவமனை மேலாண்மை செயல்திட்டம்: ஜிப்மரில் இன்று முதல் அறிமுகமாகிறது
மருத்துவமனை மேலாண்மை செயல்திட்டம்: ஜிப்மரில் இன்று முதல் அறிமுகமாகிறது
ADDED : ஜன 01, 2026 04:02 AM
புதுச்சேரி: ஜிப்மரில் இன்று முதல் புதிய மருத்துவமனை தகவல் மேலாண்மை செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கொள்கைகள் அடிப்படையில், மருத்துவமனைகளுக்கான இ--சுஷ்ருத் எனப்படும் புதிய மருத்துவமனை மேலாண்மை அமைப்பை உருவாக்கியுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை இ-சுஷ்ருத் திட்டத்தை இன்று 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளது.
இது குறித்து ஜிப்மர் அதிகாரிகள் கூறிய தாவது:
இந்த முயற்சி, டிஜிட்டல் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துடன் இணைவதற்கும் ஜிப்மர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இது நோயாளிகளுக்கு தடையற்ற பாதுகாப்பான மற்றும் தரப்படுத்தப்பட்ட மின்னணு சுகாதாரப் பதிவுகளை உறுதி செய்யும்.
புதிய அமைப்புக்கு மாறும்போதும், ஆரம்ப கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணிப் பகுபாய்வுகளுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளும் போது, சிறிய செயல்பாட்டு சரிசெய்தல்கள் அல்லது சில தாமதங்கள் ஏற்படக்கூடும்.
இருப்பினும், மருத்துவப் பராமரிப்பு, சிகிச்சை அல்லது அவசர சேவைகளில் எந்தவித தடையும் இருக்காது என, நோயாளிகளுக்கு உறுதியளிக்கிறோம்.
நோயாளி சேவைகளை தடையின்றி உறுதிசெய்ய ஜிப்மரின் மருத்துவம், செவிலியர் துறை மற்றும் நிர்வாக பிரிவுகள் முழுமையாக தயாராக உள்ளன.
புதிய அமைப்பைச் சீராகச் செயல்படுத்துவதற்காக போதுமான நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜிப்மர், உயர்தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், மேம்பட்ட செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார முயற்சிகளுடன் ஒருங்கிணைப்புக்காக நவீன தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இந்த டிஜிட்டல் மாற்றத்தின் போது நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் புரிதலும் இதன் சீரான செயல்பாட்டிற்குப் பெரிதும் பங்களிக்கும்.
இவ்வாறு ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

