ADDED : அக் 25, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில் வீடு புகுந்து, 4 சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீராம்பட்டினம் சுனாமி குடியிப்பை சேர்ந்தவர் முருகன் மனைவி சரிதா, 40. இவர், நேற்று முன்தினம் மாலை, வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது, பீரோவில் இருந்த, 4 சவரன் நகைகளை காணவில்லை.
அவர் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நகையை திருடி சென்ற, மர்ம நபரை தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

