தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


UPDATED : செப் 02, 2026 05:58 PM

ADDED : செப் 02, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 05:58 PM ADDED : செப் 02, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

ஏம்பலம் தொகுதி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் நகர், அரசு குடியிருப்பில் 50 வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள், தங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன்தாஸ் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் மூலம் 5 லட்ச ரூபாய் செலவில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மோகன்தாஸ் எம்.எல்.ஏ., குடிநீர் விகியோகத்தை துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் திருவேங்கடம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us