/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறையில் மருந்து மோசடி எப்படி நடந்தது: ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்
/
சுகாதாரத்துறையில் மருந்து மோசடி எப்படி நடந்தது: ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்
சுகாதாரத்துறையில் மருந்து மோசடி எப்படி நடந்தது: ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்
சுகாதாரத்துறையில் மருந்து மோசடி எப்படி நடந்தது: ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்
ADDED : நவ 04, 2025 01:41 AM
புதுச்சேரி:  முன்னாள் இயக்குனர்கள் உள்பட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில், மருந்து மோசடி எப்படி நடந்தது தகவல் அதிர்ச்சியை ஏ ற்படுத்தி உள்ளது.
கடந்த 2018- 19ம் ஆண்டு புதுச்சேரி தேசிய சுகாதார இயக்ககம் சார்பில் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கான சத்து மாத்தி ரைகள் வாங்கிய மோசடி வழக்கில், புதுச்சேரி சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர்கள் ராமன்,67; மோகன்குமார்,65; முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி,62; சாய்ராம் ஏஜென்சியின் பங்குதாரர்களான நடராஜன் மனைவி புனிதா,34; நந்தகுமார், பத்மஜோதி ஏஜென்சி உரிமையாளர் மோகன் ஆகிய 6 பேரை  கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மருந்து மோசடி எப்படி நடந்தது என்று சுகாதார ஊழியர்கள் கூறுகையில், அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் மருந்து அளவை, மருந்தாளுனர் நடராஜன் கண்டறிந்தார்.
இதற்கு தேவையான மருந்துகளை காலாவதி தேதி அருகில் உள்ளதாக வாங்கினால் பெருத்த லாபம் மருந்து நிறுவனங்களிடமிருந்து பெறலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
அதன் பின் நான்கு மாதங்களுக்குள் காலாவதியாகும் நிலையில் உள்ள விட்டமின் மாத்திரைகள் மற்றும் சத்து டானிக்குகளை 2.5 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் துணையுடன் கோப்புகளை தயார் செய்தார். அதன் பின்னர் தனது  மனைவி புனிதா, நண்பர் நந்தகுமார் பங்குதாரராக உள்ள சாய்ராம் ஏஜென்சி, இன்னொரு நண்பர்  மோகன் ஆகியோர் பெயரில் பத்மஜோதி ஏஜென்சி எனும் இரண்டு போலி  மருந்து விற்பனை நிறுவன மூலம் இந்த மருந்துகளை தேசிய சுகாதார இயக்கத்தை வாங்க செய்தார்.
இதில்,ரூ.2.5 கோடிக்கு வாங்கப்பட்டாலும், குறைவான எண்ணிக்கையிலேயே மருந்துகள் மருந்து குடோனிற்கு வந்துள்ளன. அதைதொடர்ந்து, இந்த மருந்துகள் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வேகமாக அனுப்பப்பட்டது. இங்குதான் சிக்கினார் மருந்தாளுனர் நடராஜன், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மருந்துகள் விரைவில் தீர்ந்துபோனது. மட்டுமின்றி, கர்ப்பிணி, குழந்தைகளுக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தியது. இதனால்  அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள். மருந்து பற்றாக்குறையை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சுதரித்து கொண்ட அரசு அதிகாரிகள் மருந்து பற்றாக்குறைக்கு என்ன காரணம் என கண்டறியும் போது வாங்கின தொகைக்கு மருந்து வரவில்லை, ஆனால் கோப்புகளில் மருந்து வந்ததாக பதிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக மருந்தினை ஆய்வு செய்த போது, அது தரமற்ற காலாவதி தேதியுடன் இருந்ததை கண்டுபிடித்தனர். நான்கு மாதங்களுக்குள் மருந்துகள் மருத்துவமனைகளில் காலியாகிவிடும் என திட்டம் போட்ட நடராஜனின் மோசடிகள் பற்றாக்குறை பிரச்னையால்  தவிடு, பொடியாகி வழக்கில்   சிக்கிக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த மோசடி வழக்கை, நீர்த்துப் போகும் வகையில், இரண்டு ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் மருந்தாளுனர்  நடராஜன்  சென்னை ஐகோர்ட்டில்  தொடர்ந்த  வழக்கில், நான் முதல் குற்றவாளி கிடையாது அதனால் இந்த வழக்கை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும் என வழக்காடினர். உடனே ஐகோர்ட் இந்த வழக்கு தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. வேறு வழியின்றி  அனைவரும் கைதாகி உள் ளனர்.

