தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பட்ஜெட் எப்படி? அரசியல் கட்சிகள் விமர்சனம்

 புதுச்சேரி பட்ஜெட் எப்படி? அரசியல் கட்சிகள் விமர்சனம்

 புதுச்சேரி பட்ஜெட் எப்படி? அரசியல் கட்சிகள் விமர்சனம்


ADDED : ஆக 28, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா அறிக்கை:

மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்காத, தொலைநோக்கு பார்வையின்றி வெற்று அறிக்கையாக பட்ஜெட் உள்ளது.

ரூ. 14,300 கோடி பட்ஜெட்டில், அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 2,200 கோடி மட்டும் தான் மிஞ்சுகிறது. இதை வைத்து எந்த வளர்ச்சியை எட்ட முடியும்.

மாநில அந்தஸ்து, தொழில் வளர்ச்சியை உள்ளடக்கிய பெஸ்ட் புதுச்சேரி, உள்ளாட்சித் தேர்தல், நிதிக் குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, பழைய கடன்களை தள்ளுபடி செய்வது போன்ற முக்கிய பிரச்னைகளுக்காக முதல்வர் டில்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து சாதிக்க வேண்டும்.

என்.ஆர். காங்.: என்.ஆர்.காங்., மாநில பொது செயலாளர் ஜெயபால் அறிக்கை:

முதல்வர் ரங்கசாமி, கடந்த நிதியாண்டை காட்டிலும் 700 கோடிக்கு மேல் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதிபெற்று பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிர்வாக திறமைக்கு சான்று.

மாணவர்களுக்கு கணினி, இலவச பஸ் வசதி ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் திருமண நிதி உதவித்தொகை ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ. 75 ஆயிரமாக உயர்வு, ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை திருமண நிதி உதவித்தொகை ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு, விதவை மறுமண உதவித் தொகை ரூ. 75 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் உயர்வு, ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் திருமண உதவித்தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தியது வரவேற்கதக்கதாகும்.

இந்திய கம்யூ.: மாநில செயலாளரர் சலீம் அறிக்கை:

முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த ரூ. 14,300 கோடி வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், சம்பளம், ஓய்வூதியம், கடன் திருப்பி செலுத்துதல், கடனுக்கான வட்டி, மின்சாரம் கொள்முதல் ஆகியவற்றிற்காக பெரும் பகுதி நிதி வளம் செலவாகிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த பட்ஜெட்டில் மகளிர் சிறப்பு நிதி, இளைஞர் சிறப்பு நிதி, பசுமை சிறப்பு நிதி என்று ஒதுக்கப்பட்டதில் எந்தவித மேம்பாடும் ஏற்படவில்லை. புதுச்சேரி அரசின் 2026-27 வரவு, செலவு திட்ட அறிக்கை, மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் வெற்று அறிக்கையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us