/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுஷ் மருத்துவமனையை செயல்பட வைப்பது எப்படி?
/
ஆயுஷ் மருத்துவமனையை செயல்பட வைப்பது எப்படி?
ADDED : மார் 19, 2025 06:28 AM
புதுச்சேரி : 'மாகி ஆயுஷ் மருத்துவமனை பயிற்சி மாணவர்களை, மூன்று மாதம் காலம் வில்லியனுாரில் ஆயுஷ் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்பலாம்' என, அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசினார்.
சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
வில்லியனுாரில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்பட்டது. அதில் 20 படுக்கைகள் ஆயுர்வேதத்திற்கும், 20 படுக்கைகள் சித்த மருத்துவத்திற்கும், 10 படுக்கைகள் ேஹாமியோபதி மருத்துவத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும், அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரவில்லை.
மாகி ஆயுஷ் மருத்துவமனை பயிற்சி மாணவர்களை, மூன்று மாதம் காலம் வில்லியனுாரில் ஆயுஷ் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்பலாம். இதன் மூலம் இந்த மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும்.
மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் கிடைக்கும். இதேபோல் ஆயுஷ் மருத்துவத்தில் போதிய டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை அரசு சரி செய்ய வேண்டும். நிதியும் ஒதுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அசோக்பாபு பேசினார்.