/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லூரியில் மனித வள மேலாளர்கள் கருத்தரங்கம்
/
மணக்குள விநாயகர் கல்லூரியில் மனித வள மேலாளர்கள் கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் கல்லூரியில் மனித வள மேலாளர்கள் கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் கல்லூரியில் மனித வள மேலாளர்கள் கருத்தரங்கம்
ADDED : மார் 25, 2025 04:08 AM

புதுச்சேரி: புதுச்சேரிமணக்குள விநாயகர் பொறியில் கல்லூரியில் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு,மனித வள மேலாளர்கள் கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு, தட்சசீல பல்கலை கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன்,செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன்,இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு கல்லூரி வாழ்த்து பாடலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தேசிய அளவில் நடந்த ஐடியா லேப் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்த மாணவர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு மேலாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.கருத்தரங்கில்,கல்லூரியின் அணைத்து டீன்கள், தேர்வு துறை கட்டுப்பாட்டாளர்,துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் 15க்கும், மேற்பட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் மனித வள மேலாளர்கள் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
வேலை வாய்ப்பு துறை டீன் கைலாசம் நன்றி கூறினார்.