/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனிதவள வட்டாரம் மாதாந்திர கூட்டம்
/
மனிதவள வட்டாரம் மாதாந்திர கூட்டம்
ADDED : ஜன 26, 2025 05:19 AM

புதுச்சேரி : புதுச்சேரி மனிதவள வட்டாரம் சார்பில், 93வது மாதாந்திர கூட்டம் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி இ.எஸ்.ஐ., பிராந்திய அலுவலகத்தின் மேலாளர் லட்சுமிகாந்த், துணை மேலாளர் உதயகுமார், சுரேஷ், சக்திதாசன், விஜயன் ஆகியோர் சமீபத்திய இ.ஐ.எஸ்., நடவடிக்கைகள் என்ற தலைப்பில், கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களில் இருந்து மனிதவள வல்லுநர்கள், மணக்குள விநாயகர் கல்லுாரி குழுமத்தின் மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு, அறிந்தனர். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி. டி.ஒ.எச்.ஆர்.சி., யின் தலைவர் நிஷா பேகம், துணை தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ரோஜி, துணை பொருளாளர் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.