/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்
/
நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்
நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்
நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்
ADDED : மார் 24, 2025 04:15 AM

விவசாய சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி: நுாறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவி வரவேற்றார். பொருளாளர் ஜெயராமன் சங்க நடவடிக்கை குறித்து பேசினார். துணை தலைவர் பாஸ்கர், துணை செயலாளர் ஆதிமூலம், பழனி, பகுதி செயலாளர்கள் ஜெயகோபி, ரங்கநாதன், முத்துமல்ல, விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயற்கை முறையில் கரும்பு விவசாயம் செய்து நாட்டு சர்க்கரை தயாரிக்கும் திருபுவனைபாளையம் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். பெஞ்சல் புயல் மழையின்போது பாதிக்கப்பட்ட சங்கராபரணி, பம்பை, மலட்டாறு, தென்பெண்ணையாற்றின் கரை பகுதிகளை எதிர்கால மழை வெள்ளத்தால் மீண்டும் பாதிக்கப்படாத வகையில் பலப்படுத்த வேண்டும்.
லிங்கரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படும் என சட்டசபை அறிவிப்புக்கு வரவேற்பும், இடுபொருள் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட செலவுகள் அதிக அளவில் கூடி உள்ளதால், புதுச்சேரி வேளாண் துறை விவசாயிகளுக்கு வழங்கும் சாகுபடி உற்பத்தி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..