/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைப்பட்டா வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம்
/
மனைப்பட்டா வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம்
ADDED : அக் 23, 2025 06:33 AM

திருக்கனுார்: தேத்தாம்பாக்கத்தில் இலவச மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மக்கள் இலவச மனைப்பட்டா வழங்ககோரி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், அக்கிராம மக்கள் நேற்று இலவச மனைப்பட்டா, தடையின்றி மின்சாரம், பள்ளி கூடத்திற்கு அடிப்படை வசதிகள் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், காங்., நிர்வாகிகள் பரமசிவம், சுரேஷ், இனாமுல் ஹசன், தி.மு.க., நிர்வாகிகள் குமார், செந்தில்வேலன், வி.சி., நிர்வாகிகள் பாவாணன், சிவசங்கர் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
தகவலறிந்த வில்லியனுார் தாசில்தார் சேகர், எஸ்.பி., சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.