/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணிக்கு கொடுமை கணவர் கைது
/
கர்ப்பிணிக்கு கொடுமை கணவர் கைது
ADDED : ஏப் 06, 2025 07:56 AM
பண்ருட்டி : கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயராகவன்,31; இவரும், காடாம்புலியூர் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெரு சிவா மகள் சிவஸ்ரீ,20; என்பவரும் காதலித்து கடந்த 2024 நவ., மாதம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின், இருவரும் மருங்கூர் வீட்டில் குடும்பம் நடத்தினர். சிவஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், விஜயராகவன் வரதட்சணையாக 5 சவரன் நகை, 75,000 ரூபாய் பணம் வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து சிவஸ்ரீ அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விஜயராகவனை கைது செய்தனர்.

