தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை


ADDED : பிப் 20, 2024 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வளவனுார், தக்கா தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 30; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி லோகநாயகி. ஒரு வயதில் மகன் உள்ளார். கருணாகரன் கடந்த ஐந்து மாதங்களாக வில்லியனுார் பாண்டியன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சமாதானம் ஆகி விடுவர். கடந்த 14ம் தேதி கருணாகரன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் லோகநாயகி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த கருணாகரன் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து லோகநாயகி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us