ADDED : ஏப் 14, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஷியாம்குமார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில், மனைவியை தாக்கி, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
காயமடைந்த அவர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவரது மனைவி பாரதிபிரியா, 38; நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து ஷியாம்குமாரை தேடி வருகின்றனர்.
