தடுப்பணைகள் அமைத்து கொடுத்தேன் :காங்., வேட்பாளர் செல்வம் பெருமிதம்
தடுப்பணைகள் அமைத்து கொடுத்தேன் :காங்., வேட்பாளர் செல்வம் பெருமிதம்
ADDED : ஏப் 05, 2026 11:22 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று திருக்கனுார் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளர் செல்வம், பேசுகையில், 'நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது சாலை, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டது. தொகுதியில் நிலத்தடி நீரை அதிகரிக்க செட்டிப்பட்டில் ரூ. 7 கோடி மதிப்பில் தடுப்பணை, கைக்கிலப்பட்டு - சுத்துக்கேணி இடையே ரூ. 35 கோடி மதிப்பில் மேம்பாலத்துடன் கூடிய தடுப்பணை அமைக்கப்பட்டது.
தொகுதி முழுதும் குடிநீர் பற்றாக்குறை போக்கப்பட்டுள்ளது. விவசாய பாசனத்திற்கு தண்ணீர் நல்ல நிலையில் கிடைக்கிறது. தொகுதி மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, அதனை உடனடியாக நிறைவேற்றி தந்துள்ளேன்.
எனவே, மீண்டும் தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்தால், தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என, உறுதி அளித்து, 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
