தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என் ஓட்டு எனக்கில்லையே... தொகுதி மாறி ஓட்டு போட்ட வேட்பாளர்கள்

 என் ஓட்டு எனக்கில்லையே... தொகுதி மாறி ஓட்டு போட்ட வேட்பாளர்கள்

 என் ஓட்டு எனக்கில்லையே... தொகுதி மாறி ஓட்டு போட்ட வேட்பாளர்கள்


ADDED : ஏப் 09, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேர்தல் வெற்றிக்காக வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் பலர் தங்கள் ஓட்டை, வேறு வேட்பாளர்களுக்கு போட்ட ருசிகர சம்பவம் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அதிகம் காணப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் போட்டியிடும் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்களும் கடந்த இரு வாரமாக வீதி, வீதியாக சென்றும், வீடு, வீடாக சென்று வாக்களர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

தங்கள் வெற்றிக்காக ஓட்டு கேட்டு மன்றாடிய வேட்பாளர்களில் பலர் தொகுதி மாறி போட்டியிடுவதால், நேற்று நடந்த தேர்தலில் தங்கள் ஓட்டையும், தங்கள் குடும்ப ஓட்டையும் வேறு வேட்பாளர்களுக்கு பதிவு செய்தனர்.

அதில், தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்., சார்பில், போட்டியிடும் முதல்வர் ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதியிலும், தட்டாஞ்சாவடி தொகுதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியிலும், வில்லியனுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவா உருளையன்பேட்டை தொகுதியிலும், உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி காலாப்பட்டு தொகுதியிலும், காலாப்பட்டு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில் (எ) ரமேஷ், தட்டாஞ்சாவடி தொகுதியிலும், காமராஜ் நகர் தொகுதி லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஸ்சார்லஸ் மார்ட்டின் உழவர்கரை தொகுதியிலும், முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியிலும், திருபுவனை (தனி) தொகுதி த.வெ.க., வேட்பாளர் சாய்சரவணன்குமார் ஊசுடு (தனி) தொகுதியிலும், நெல்லித்தோப்பு ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் ஊசுடு (தனி) தொகுதியிலும், காலாப்பட்டு தொகுதியில் காங்., போட்டி வேட்பாளர் ஷாஜகான் ராஜ்பவன் தொகுதியில் ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us