இலவச மனை பட்டா வாங்கி தருவேன்: த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு
இலவச மனை பட்டா வாங்கி தருவேன்: த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 06, 2026 09:35 PM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமு, விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். அபிேஷகப்பாக்கம் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக தொகுதி மக்களை சந்தித்து வருகின்றார்.
வேட்பாளர் ராமு கூறுகையில்,
வரும் தேர்தலில் என்னை வெற்றிப்பெற செய்தால், மணவெளி தொகுதியான அபிேஷகப்பாக்கத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்ட வாங்கி தருவேன். இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பேன்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். மேலும், தேடுவார்நத்தம் சுடுகாடு பாதை பிரச்னை மற்றும் இங்குள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை வசதியான சாலை மற்றும் நல்ல குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, த.வெ.க., தொகுதிகள் நிர்வாகிகள், கிராம பெண்கள் கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
