உழவர்கரையை முதன்மை தொகுதியாக்குவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் வாக்குறுதி
உழவர்கரையை முதன்மை தொகுதியாக்குவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 08:32 PM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கிடைக்க ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என கூறி, என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி ஓட்டு சேகரித்தார்.
உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி நேற்று காலை ஜெயா நகர், கமலம் நகர், எம்.ஜி.ஆர்., நகர், ரங்கா நகர்களில் முதல்வர் ரங்கசாமி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் நாராயணசாமி பேசுகையில், 'முதல்வர் ரங்கசாமியின் நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்வேன். உழவர்கரையை புதுச்சேரியின் முதன்மை தொகுதியாக மாற்ற ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள்' என்றார்.
ஓட்டுசேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
