உழவர்கரையை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்: த.வெ.க., சசிபாலன் உறுதி
உழவர்கரையை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்: த.வெ.க., சசிபாலன் உறுதி
ADDED : ஏப் 03, 2026 05:53 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியை மாநிலத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என, த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் வாக்குறுதி அளித்தார்.
உழவர்கரை தொகுதி த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் நேற்று ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வேட்பாளர் சசிபாலன் அப்பகுதி மக்களிடம் தான் செய்த மக்கள் நலப் பணிகளை எடுத்து கூறினார். தனக்கு வாய்ப்பு தந்தால் உழவர்கரை தொகுதியை மாநிலத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன்' என்றார். ஓட்டு சேகரிப்பின் போது, த.வெ.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
