
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த மீன் விற்கும் பெண்களுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, திட்ட அதிகாரி மீரா சாஹிப், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் கோபி, ராகேஷ், உறுப்பினர்கள் சக்தி, மோரிஸ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.