/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் குழந்தைகளுக்கு அடையாள அட்டை
/
பெண் குழந்தைகளுக்கு அடையாள அட்டை
ADDED : ஆக 22, 2025 03:44 AM

அரியாங்குப்பம்: முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ், அரியாங்குப்பம் தொகுதியில் 42 பெண் குழந்தைகளுக்கு அடையாள அட்டையை, பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், முதல்வரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை ( காப்பீடு) வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் தொகுதியில், பெண் குழந்தைகள் காப்பீட்டிற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், 42 பெண் குழந்தைகளுக்கு அடையாள அட்டையை, பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை இயக்குநர் ஜெயப்பிரியா, ஆய்வாளர் நாகராஜன், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.