/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குற்ற வழக்கு விபரங்களை மறைக்கும் போலீஸ் பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
/
குற்ற வழக்கு விபரங்களை மறைக்கும் போலீஸ் பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
குற்ற வழக்கு விபரங்களை மறைக்கும் போலீஸ் பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
குற்ற வழக்கு விபரங்களை மறைக்கும் போலீஸ் பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
ADDED : ஜன 26, 2025 06:46 AM
சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசம் புதுச்சேரி. தமிழகத்தை ஒப்பிடும்போது ஒரு மாவட்டத்திற்கு இணையான நிலப்பரப்பு, மக்கள் தொகை கொண்டது. அருகில் உள்ள விழுப்புரம், கடலுார் மாவட்டத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கும் பாதுகாப்பும், ஒரே ஒரு ஐ.பி.எஸ்., தலைமையில் பராமரிக்கப் படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், டி.ஜி.பி., ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் என, 10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். தவிர, 25க்கும் மேற்பட்ட பி.பி.எஸ்., அதிகாரிகள் எஸ்.பி.,க்களாக உள்ளனர்.
இவ்வளவு அதிகாரிகள் இருந்தும், நாட்டு வெடிகுண்டு கலாசாரம், கஞ்சா விற்பனை, ரவுடிகள் மாமூல் வசூல், விபசாரம், லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் புதுச்சேரி முழுதும் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி வருகிறன.
சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 1 மாணவன், கத்தி, நாட்டு வெடிகுண்டு எடுத்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் வெளியே எப்படி பத்திரிக்கைகளுக்கு செல்கிறது என, போலீஸ் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி விசாரணை நடத்தினார்.
தினமும் புதுச்சேரி முழுதும் அனைத்து போலீஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் குறித்த அறிக்கை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குழுவில் பதிவிடப்படுகிறது. அதன் மூலம் தெரிந்து கொள்வதாக தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை உடனடியாக நிறுத்துமாறு உயர் அதிகாரி உத்தரவிட்டார். அதனால் கடந்த 2 நாட்களாக குற்ற வழக்கு விபரங்கள் அடங்கிய டி.ஒ.ஆர்., வெளியிடப்படவில்லை.
இது குறித்து எஸ்.பி., ஒருவரிடம் விசாரித்தபோது, கொரோனா காலத்தில் இருந்து டி.ஓ.ஆர்., அறிக்கை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்படுகிறது. இதனை வெளியிட ஏதேனும் உத்தரவு உள்ளதா என உயர் அதிகாரி கேட்டார்.
உத்தரவு ஏதும் இல்லாதபோது, எப்படி எப்.ஐ.ஆர்., தகவல்கள் வெளியீடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உத்தரவு இருந்தால் மட்டுமே வெளியிட வேண்டும் என தெரிவித்தார். அதனால் கடந்த 2 நாட்களாக டி.ஒ.ஆர்., வெளியிடப்படவில்லை என, கூறினார்.
புதுச்சேரியில் குற்ற வழக்குகள் விபரங்கள் பத்திரிக்கைகளுக்கு தெரியாமல் மறைத்து விட்டால், குற்றங்கள் நடக்காத புதுச்சேரி என மாற்றிவிடலாம் என யூகித்துள்ளனர். அதன் வெளிப்பாடே குற்ற வழக்கு விபரங்களை வெளியிடாமல் மறைப்பது போல் உள்ளது.
இச்செயல் 'பூனை கண் மூடினால் பூலோகமே இருண்டு விட்டது என நினைக்குமாம்' என்பது போல் உள்ளது.