/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் 6 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
/
லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் 6 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் 6 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் 6 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
ADDED : டிச 26, 2025 05:38 AM

புதுச்சேரி: அரியூர் தனியார் பள்ளி வளாகத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், மகளிருக்கான, சார்லஸ் மார்ட்டினின் வாக்குறுதிகள் அறிமுக விழா நடந்தது.
கட்சி தலைவர் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கரன், ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், நடிகர் தாடி பாலாஜி மற்றும் நிர்வாகிகள், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மண்டல பொது செயலாளர் கண்ணபிரான் வரவேற்றார்.
விழாவில் லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால், 6 பெண் தலைவர்கள் பெயரில் மகளிருக்கு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் அறிவித்து, விளக்கப்பட்டன.
அதன்படி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார் மகளிர் பாதுகாப்புத் திட்டம், தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டம், முத்துலட்சுமி ரெட்டி மகளிர் சுகாதார திட்டம், மணியம்மை பெண்கள் சுய மரியாதைத் திட்டம், அவ்வையார் பெண்கள் ஆளட்டும் திட்டம், சரசுவதி சுப்பையா மகளிர் உரிமைத் திட்டம், ஆகிய திட்டங்களை லட்சிய ஜனநாயக கட்சியின் பெண் நிர்வாகிகள் அறிமுகம் செய்தனர்.
விழாவில் பங்கேற்ற அனைத்து மகளிருக்கும் சேலை, டி-சர்ட், பிரியாணி உள்ளிட்ட நலத்திட்டங்களை சார்லஸ் மார்ட்டின் வழங்கி, பேசியதாவது:
2026 சட்டசபை தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சி, ஆட்சி அமைத்தால், புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமகள்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி, 10 கிராம் தங்கம் வழங்கப்படும் .
இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.35 ஆயிரம் நிதி உதவி, ஜே.சி.எம்., ஊட்டச்சத்து கிட் வழங்கப்படும்.
கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள், திருமணம் ஆகாத பெண்களுக்கு, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டசபையில் தற்போது ஒரு பெண் எம்.எல்.ஏ., மட்டுமே உள்ளார். 2026-ல் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், குறைந்தது 6 பெண் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெறுவர்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தனி வாரியம் அமைத்து அதற்கு என் சொந்த பணம் ரூ.100 கோடி ஒதுக்குவேன்' என்றார்.

