/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட்டுக்கு சென்றால் ரூ. 2,000; கையில் கொடுத்தால் ரூ. 500
/
கோர்ட்டுக்கு சென்றால் ரூ. 2,000; கையில் கொடுத்தால் ரூ. 500
கோர்ட்டுக்கு சென்றால் ரூ. 2,000; கையில் கொடுத்தால் ரூ. 500
கோர்ட்டுக்கு சென்றால் ரூ. 2,000; கையில் கொடுத்தால் ரூ. 500
ADDED : பிப் 02, 2025 04:00 AM
அபராதத்தில் 'டிஸ்கவுண்ட்'
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு வந்ததும், ஒரு பக்கம் பொதுமக்கள் ஹெல்மெட் வாங்க திண்டாடுவதும், மறுபக்கம் போக்குவரத்து போலீசார் கொண்டாட்டத்திலும் உள்ளனர்.
போக்குவரத்து போலீசார், ஆங்காங்கே வாகனங்களை மறித்து அபராதம் விதித்து வருவதால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய துவங்கி விட்டனர்.
மாநில எல்லையில், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் சிலர், வெளி மாநில வாகனங்களை குறி வைத்து, அதிகம் சோதனை செய்கின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ. 1000மும், கார்களில் சீட் பெல்ட் அணியவில்லை, டிரைவர் சீருடையில்லை என பல காரணங்களை கூறி, அதற்கு ரூ. 2,000 வரை அபராதம் ஆகும் என கூறுகின்றனர்.
வழக்கு பதிந்து கோர்ட்டுக்கு சென்றால் ரூ. 2,000 செலவாகும், இங்கேயே செலுத்திவிட்டால் ரூ. 500 என்று கூறி வசூலிக்கின்றனர். போதிய பணமில்லை என கூறும் வாகன ஓட்டிகளிடம் 'நோ பார்க்கிங்' என குறிப்பிட்டு, ரூ. 500 அபராதம் வசூலிக்கின்றனர்.
வெளி மாநில டிரைவர்கள் கூறுகையில், 'புதுச்சேரி சுற்றுலாவுக்கு வந்து, பணத்தை செலவழித்து விட்டு ஊருக்கு செல்லும்போது, மாநில எல்லையில் வாகனத்தை மறித்து, போலீசார் வழக்கு போடுவதாகவும், சுரண்டும் வகையில் அபராதம் கேட்கின்றனர்.
அதிக அபராத தொகையை கூறிவிட்டு, உடனே கட்டுவதாக இருந்தால், அதற்கு டிஸ்கவுண்ட் என கூறி, அபராத தொகையை குறைத்து, வசூலிக்கின்றனர். இந்த உடனடி கலெக் ஷன் அனைத்தும் அரசின் கஜானாவிற்கு செல்கிறதா என்ற சந்தேகம் உள்ளது என, அதிருப்தி தெரிவித்தனர்.