/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
8 மாதத்தில் ரூ. 33 கோடி மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை; பொதுமக்களே உஷார்
/
8 மாதத்தில் ரூ. 33 கோடி மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை; பொதுமக்களே உஷார்
8 மாதத்தில் ரூ. 33 கோடி மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை; பொதுமக்களே உஷார்
8 மாதத்தில் ரூ. 33 கோடி மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை; பொதுமக்களே உஷார்
ADDED : செப் 24, 2024 12:15 AM

புதுச்சேரி: சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் புதுச்சேரி மக்கள் இந்தாண்டு இதுவரை ரூ. 33 கோடி பணத்தை இழந்துள்ளனர். இதில், ரூ. 9.52 கோடி மீட்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு இணையாக 'சைபர்' குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தினசரி குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளம் மூலம், சைபர் கிரைம் மோசடிகள் குறித்து ஏராளமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மொபைல் போன்களில் மூழ்கி கிடக்கும், பொய் செய்திகளை உண்மை என நம்பும் ஆசாமிகள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில், சைபர் கிரைம் கும்பல் விரிக்கும் ஆசை வலையில் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு, தேசிய அளவிலான புகார் போர்டலில் 1,158 புகார்கள் பதிவானது. அதில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், ரூ. 73,09,047 லட்சத்தை பொதுமக்கள் இழந்தனர். இதில், போலீசார் ரூ. 10 லட்சத்தை மீட்டனர்.
கடந்த 2023ம் ஆண்டில், இணையதளம் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி வழியாக (என்.சி.ஆர்.பி.) 3,556 புகார்கள் பதிவானது. இதில், 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் இழந்த ரூ.8.93 கோடியில் ரூ. 1.21 கோடி மீட்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இதுவரை ஆன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக மொத்தம் 3,663 புகார்கள் பெறப்பட்டு, 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை ரூ. 33 கோடி வரை பொதுமக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். அதில், சைபர் கிரைம் போலீசார் ரூ. 9.52 கோடியை மீட்டுள்ளனர்.